• Sep 20 2024

பிக்பாஸ் ஏடிகேவிற்கு இத்தனை வயதா?- பார்த்தால் தெரியலையே- அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் முழுக்க பேக்கிரி டாஸ்க் மூலம் ஸ்வீட் செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் பல பிரச்சினைகள் வெடித்தது.

இதனை அடுத்து இந்த வாரம் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த அரண்மனை டாஸ்கில் தற்போது ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும் மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும், உள்ளனர்.


இந்த டாஸ்க் ஆரம்பித்த போதே ஹவுஸ்மேட்ஸ்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு விட்டது.அசீம் தனது பழைய முகத்தை காண்பிக்க ஆரம்பித்ததோடு அனைவரிடமும் சண்டை போட்டு வருகின்றார். குறிப்பாக விக்ரமனுக்கும் ஏடிகுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகின்றது.


இதனால் கடுப்பான ஏடிகே விக்ரமனிடம் சென்று அசீம் சின்னப் பையன். இப்போ தான் 30 வயது இருக்கும். எனக்கு எத்தனை வயது தெரியுமா 41 வயசு ஆகுது. வயசு வித்தியாசம் தெரியாமல் யாரிடம் வேணும் என்றாலும் எது வேணும் என்றாலும் கதைத்து விடுவாரா? எனத் திட்டிப் பேசியுள்ளார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement