விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் இதனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப் போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அண்மையில் தான் புதிய கார் வாங்கிய விடயத்தையும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்பொழுது புதிதாக படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அதன் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்காக பூஜை போடப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!