பிரபல நடிகர் மற்றும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான, கமல் ரஷித் கானை மும்பை போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு அவர் போட சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக விமானநிலையத்திலேயே வைத்து கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஆர்கே என்று பாலிவுட் ரசிகர்களால் அழைக்கப்படுபவர், பிரபல சர்ச்சை நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கமல் ரஷித் கான். இன்று துபாயில் இருந்து மும்பை வந்த அவரை, விமான நிலையத்திலேயே வைத்து, மலாட் போலீசார் கைது செய்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் இவர் போட்ட பதிவு காரணமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.2020 ஆம் ஆண்டு, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக இறந்த ரிஷி கபூர் பற்றியும், அரியவகை புற்று நோய் காரணமாக இறந்த இர்ஃபான் கான் குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டதன் காரணமாக இவர் மீது பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் தான் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திறக்கப்படவிருக்கின்றன என பதிவிட்டு இருந்தார். மேலும் இதே போல் உயிருக்கு போராடி வந்த இர்ஃபான் கான் குறித்தும் சர்ச்சை பதிவு ஒன்றை போட்டார். இரண்டு பிரபலங்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது இப்படி தரக்குறைவாக பதிவு போட்ட கமல் ரஷீத் கான் மீது யுவ சேனா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ராகுல் கனல் என்பவர் புகார் அளித்தார்.
மேலும் இந்த புகாரின் அடிப்படையில் மும்பை மலாட் போலீசார் கேஆர்கே மீது வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனிடையே துபாயில் இருந்து இன்று மும்பை வந்த நடிகர் கமல் ரஷீத் கானை மும்பை விமான நிலையத்திலேயே வைத்து மலாட் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது ஐபிசி பிரிவு 294 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்றைய தினமே போரிவலி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவார் என தெரிகிறது. இந்த சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!