கன்னட பிக்பாஸ் விவகாரத்தில் புலி நகம், புலித்தோல் வைத்திருப்பதாக எழுந்த புகாரில் பா.ஜ.க. எம்.பி. உட்பட 5 பேருக்கு வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கன்னட சீசனில் சந்தோஷ் என்ற போட்டியாளர் கலந்து கொண்டிருந்தார். அவர் ஒரு விவசாயி. அவர் எருது போட்டிகளில் விளையாடுவது, அதிகமாக தங்க நகைகளை அணிவதன் மூலம் கர்நாடகத்தில் மிகவும் பிரபலமாகியிருந்தார்.
அதன்படி, கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்த்தூர் சந்தோஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கழுத்தில் புலி நகத்துடன் கூடிய சங்கிலி அணிந்திருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கே சென்ற வனத்துறையினர், அவரிடம் விசாரித்துள்ளனர்.
இதன்போது, அவர் அணிந்திருந்தது உண்மையான புலி நகங்கள் கொண்ட சங்கிலி என்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நடிகர்கள் தர்ஷன், நிகில் குமாரசாமி, பாஜக எம்.பி. ஜக்கேஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பிரபல சாமியார் வினய்குருஜி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, கன்னட பிக்பாஸில் சமீபகாலமாக அதன் டிஆர்பி குறைந்துவிட ,அதை மீண்டும் எட்டிப்பிடிக்கும் நோக்கில் இவ்வாறான சம்பவங்களை பிக்பாஸ் செய்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!