• Sep 21 2024

சீரியலில் எண்ட்ரீ கொடுக்கும் பிக்பாஸ் ஜுலி-எந்த தொடர் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி.இவர் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தான் பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால் நெக்கட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார். இருப்பினும் இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானார் அதே போல சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது.



இந்த பிக்பாஸ் முதல் சீசனில் வீரத்தமிழச்சியாக கலந்துகொண்டு பின் கடைசியில் சந்திக்க கூடாத பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தவர் ஜுலிக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபற்றி அதை அப்படியே மாற்றினார்.இப்போது ஜுலிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது என்று தான் கூற வேண்டும்.நிறைய படங்கள் கமிட்டாகி நடிக்கிறாரோ இல்லையோ அதிக போட்டோ ஷுட்கள் நடத்துகிறார்.

அவ்வப்போது சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டி வந்த ஜுலி இப்போது நிஜமாகவே ஒரு தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது. அத்தோடு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டாள் தொடரில் தான் ஜுலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சீரியலில் அவரது எண்ட்ரிக்கான ப்ரமோ தற்போது வெளியாக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.



Advertisement

Advertisement