விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற உடனேயே லாஸ்லியாக்கு பல்வேறு ஆர்மிக்கள் தொடங்கப்பட்டு ஆதரவு அலை வீசத்தொடங்கியது.
இலங்கைத் தமிழ், கியூட்டான சிரிப்பு, குறும்புத்தனம் என பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த லாஸ்லியா இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் பயணித்ததுடன் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர் ஒருவருடன் காதல் சர்ச்சையிலும் சிக்கி இருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒருசில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற லாஸ்லியாக்கு அவரது எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக குறித்த படங்கள் வெற்றியளிக்கவில்லை
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் தனது முழுக்கவனத்தையும் திருப்பிய லாஸ்லியா அதில் தனது போட்டோஷூட் படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி வருகின்றார்.
Listen News!