• Sep 21 2024

காதலிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் முகேன் ராவ்... வாவ் என்ன ஒரு ரொமான்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

முகேன் ராவ் மலேசியாவை சேர்ந்த ஒரு பிரபலமான இசைக் கலைஞர் ஆவார். அதுமட்டுமல்லாது இவர் ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட் கூட. விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றிருக்கின்றார். 


குறிப்பாக முகேன் ராவ் மலேசியா வாழ் தமிழராக திகழ்ந்தாலும் பின்னணி பாடகராக இருந்து ஆல்பம் பாடல்களை வெளியிட்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த ஆல்பம் பாடல் மற்றும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.


இவ்வாறாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பெண்களின் கனவு நாயகனாக மாறிய முகேன் ராவ் சில வருடங்களுக்கு பிறகு தான் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்ற தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தினார். 


இந்நிலையில் தற்போது தன்னுடைய காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் இருவரும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருவதோடு முகேனின் காதலிக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement