நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம் என்கிற ராமசாமி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு மேக்ஷ் ஃபேஷன், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது இந்தியாவின் பிரபல ஆண் மாடலகாவும் ராம் இருந்து வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம் அந்நிகழ்ச்சியில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தார். குறிப்பாக 63 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இருந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் சக போட்டியாளரான ஏடிகே உடன் இணைந்து கொண்டு காஸ்மோ தம்பி என்கிற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார். அந்த ஆல்பம் பாடலில் இவருக்கு ஜோடியாக ரஷி பிரபா நடித்திருந்தார். இவரையே தற்போது ராம் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராம் "What will I do without you.. Wanna know the story of how we met? 28th July, Cosmo Thambi" எனக் குறிப்பிட்டு ரஷிபிரபாவுடன் கட்டிப் பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!