• Sep 20 2024

நடிகர் பிரபுதேவாவை திடீரென சந்தித்த பிக்பாஸ் சீசன் 5 பிரபலம்- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் வடிவேலு நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடன இயக்குநராக பணியாற்றி வருகின்றார்.பிரபுதேவாவை போல் நடனத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பிரபலம் தான் பிக்பாஸ் அமீர். 5வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இவருக்கு பாவ்னி என்ற நடிகையும் காதலியாக அமைந்துவிட்டார்.

தற்போது அமீர் சமீபத்தில் பிரபுதேவாவை நேரில் சந்தித்து ஏடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement