• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராகக் களமிறங்கும் கவர்ச்சி போட்டோ ஷுட் நாயகிகள்- அடடே இவங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. 2017ம் ஆண்டு ஜுன் மாதம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது ஆரம்பிக்பட்ட போது பல சர்ச்சைகளில் சிக்கியது.

அந்த வகையில் ஆரவ், ரித்திகா, முகின், ஆரி, ராஜு ஜெயமோகன் என 5 பேரும் 5 சீசன் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.


மேலும் பிக்பாஸின் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும் என இதுவரை கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. அதேபோல் போட்டியாளர்கள் குறித்து நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.

தொகுப்பாளர் ரக்ஷன், ஸ்ரீநிதி,  பாடகி ராஜலட்சுமி என இவர்களின் பெயர்கள் அடிபட தற்போது பல போட்டோ ஷுட்கள் மூலம் சமூக வலைதளத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் 6வது சீசனில் கலந்து கொள்ள போகிறார்கள் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement