• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இனிமேல் இந்த டைம்ல ஒளிபரப்பப்படாதா?- மாத்தாதீங்கப்பா என புலம்பி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.ஐந்து சீசன்ங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இதன் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழக்க இருக்கிறார்.

இது குறித்த ப்ரோமோ ஒன்றும் அண்மையில் வெளியானது.அத்தோடு ஏனைய சீசன்களை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் எப்போதும் போல அந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து தககல் பரவி வருகிறது.ஆனால் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இந்த 6 வது சீசன் 9 மணிக்கு ஒளிபரப்பப்படாதாம்.அதற்கு பதிலாக தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement