விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஷிவானி நாராயணன். இவர் இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய இரட்டை ரோஜா சீரியலிலும் நடித்து வந்தார்.இது தவிர பல நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி வந்தார்.
தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டதை அடுத்தே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார் எனலாம். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுடன் கிசுகிசுக்கப்பட்டார்.ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை அறிவித்திருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்தடுத்த மூவிகளில் கமிட் ஆனார்.விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. அது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மனைவியாக ஷிவானி நடித்து இருந்தார். ஆனாலும் இவரின் கதாபாத்திரத்துக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. அதே போல் ஆர்.ஜே பாலாஜி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு காணமால் போனார். இதனால் ஷிவானி ரசிகர்கள் அவரை முழு நீள ஹீரோயின் ரோலில் பார்க்க ஆசைப்பட்டனர்.
இந்நிலையில் ஓணம் திருநாளன்று தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார் ஷிவானி. இயக்குநர் முத்தையாவின் முன்னாள் உதவியாளர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஷிவானி தான் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.
Listen News!