தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வானவர்களில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணத்துடன் வெளியேறி விட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மைனா வெளியேற்றப்பட்டுள்ளார்.
எஞ்சியுள்ள ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூவரில் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 2ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
இதில் சீசன் 3இன் போட்டியாளரான கவின் உள் நுழைந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது அந்த சீசனில் பணப் பெட்டியை எடுத்து சென்றது கூட கவின் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
அந்தவகையில் வீட்டிற்குள் நுழைந்த கவின் அங்குள்ள போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து கைவினை அழைத்த பிக்பாஸ் "உங்களுக்கும் பணப்பெட்டிக்கும் என்ன ராசியோ தெரியல நேற்று பணப்பெட்டி போச்சு, இன்னைக்கு நீங்க வாறீங்க" எனக் கூறுகின்றார்.
இதனைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!