• Sep 21 2024

முதல் முதலான ஒன்று கூடிய பிக்பாஸ் மகேஷ்வரி மற்றும் ஷெரினா- கன்னத்தோடு கன்னம் ஒட்டிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஐந்து சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டைகளும், சச்சரவுகளும் சற்று அதிகமாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் போட்டியாளர்கள், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை கூட யோசிக்காமல் ஒருவருக்கொருவர் முட்டி மோதி கொண்டு விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது.


 அதே நேரம் சில போட்டியாளர்கள், சற்று அமைதியாக சேப் கேம் விளையாடி வரும் நிலையில், அவர்களை சத்தம் இல்லாமல் மக்கள் வெளியே அனுப்பி வருவதும் நடந்து வருகிறது.இதுவரை சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக ஜி பி முத்து ஆகியோர் வெளியேறி உள்ளனர்.


இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் குயின்சி இந்த வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது. இது ஒருபுறம் இருக்க வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினா மகேஷ்வரியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement