பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விக்ரமன் மீது வடபழனி மகளிர் காவல்நிலைய பொலிஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் விக்ரமன். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய விக்ரமன் இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். அதன்படி, அசீம் முதலிடத்திலும் விக்ரமன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது அரசியல் பணிகளை தொடர்ந்து வரும் விக்ரமன் மீது கடந்த ஜூலை மாதம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 'தன்னை விக்ரம் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை' எனவும் கிருபா முனுசாமி என்ற பெண்ணொருவர் விக்ரம் மீது புகார் அளித்துள்ளார்.
எனினும், கிருபா என்ற பெண்ணின் புகாரை விக்ரமன் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடியுள்ளார் கிருபா.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் விக்ரமனிடம் மேலதிக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!