• Nov 10 2024

எலிமினேட் ஆன ஏடிகேவிற்கு பிக்பாஸ் சொன்ன உற்சாக வார்த்தைகள்- போட்டியாளர் செய்த காரியம்- நடந்தது என்ன?

ADK
stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில் கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.

 அவர்கள் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது. இதற்கு மத்தியில் சில டாஸ்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்றை டாஸ்காக கொடுக்கப்படுகிறது.


இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் செய்திருந்த நிலையில் அசீம் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாக காப்பாற்றப்பட்டு இரண்டாவது இறுதிப் போட்டியாளராக தேர்வாகினார். இந்த நிலையில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

நேற்றைய தினமும் சில டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் செய்திருந்தனர். அத்தோடு ஷிவின் விக்ரமன் ஆகியோரும் இறுப் போட்டிக்கு தேர்வாகினார்கள். தொடர்ந்து மைனா கதிரவன் ஏடிகே ஆகியோர் மீதமிருந்த நிலையில் அவர்களில் யார் வெளியேறுவார் என்பதற்காக உறியடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.


அதன்படி இந்த மூன்று பேர் உடைக்கும் உறிகளில் யாருடைய உறியிலிருந்து பூக்கள் விழுகின்றதோ அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது. அதன்படி இவர்கள் மூவரும் உறியை உடைத்த போது ஏடிகேவின் உறியிலிருந்து பூக்கள் கொட்டப்பட்டதால் அவர் எலிமினேட் ஆகி வெளியேறினார்.

எனினும் ஏடிகே வெளியேறும்போது  உறி அடித்து கமலிடம் பாராட்டு பெற்றார். மேலும் பிக்பாஸ் அவரை, “வெல் ப்ளேய்டு ஏடிகே... வெளியில் உங்கள் விஸ்வரூப வெற்றிக்கு ஆல் தி பெஸ்ட்” என கூறினார். அப்போது ஏடிகே, “நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.. ஆனாலும்” என கூறி, பிக்பாஸ் வீட்டு முன்பு மண்டியிட்டு வணங்கி பின், “என் நாட்டில் இருந்து வந்து இந்த அன்பை பெற்றதற்கு மகிழ்ச்சி, அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார். இவ்வாறாக ஏடிகேவின் வெளியேற்றத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.


Advertisement

Advertisement