பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் என ஒரு சீரியல் நடிகர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா பல்வேறு சவால்களை சந்தித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதும் சில வாரங்களுக்கு முன்பே அவர்தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்தது. மேலும் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர் டைட்டில் வின்னர் பெறுவது இந்த சீசனில் தான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் அர்ச்சனா, ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நாயகனாக நடித்த அருண் பிரசாத் என்பவரை காதலித்து வந்ததாக வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இது குறித்து இருவருமே எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அருண் பிரசாத் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் ஒன்றுக்கு அர்ச்சனா கமெண்ட் செய்துள்ளார். அந்த கமெண்ட் தான் தற்போது இருவரும் காதலர்கள் என்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அருண் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் படபிடிப்பின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ’என் ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி’ என்று அர்ச்சனா கமெண்ட் செய்துள்ளார். தன்னுடைய ஹீரோ என்று அர்ச்சனா பதிவு செய்துள்ளதை அடுத்து இருவரும் காதலர்கள் என்பது உறுதி செய்து விட்டதாகவும் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் தெரிகிறது. இருப்பினும் அருண் பிரசாத், அர்ச்சனா ஆகிய இருவரும் தங்களது காதல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இருவரும் சேர்ந்து ஒரு ஆல்பம் பாடலில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த ஆல்பம் பாடலின் விளம்பரத்திற்காகதான் இவர்கள் காதலர்கள் போல் நடிக்கிறார்களா? என்ற சந்தேகத்தையும் சில ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Listen News!