தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் பெயரில் மட்டுமல்லாது தொடர்ந்து தனது படங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில், முன்னாள் சூப்பர் ஸ்டார் என பிஸ்மி பேசியது ரஜினி ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது.
அதுமட்டுமல்லாது விஜய்க்கு ஆதரவாகவும் அஜித் மற்றும் ரஜினிக்கு எதிராகவும் தொடர்ந்து பிஸ்மி பேசி வருவதாக குற்றச்சாட்டுக்கள் பலவும் கிளம்பி இருக்கின்றன. இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக பிஸ்மி பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் டிரெண்டாகி வருகிறது.
அதாவது அந்தப் பதிவில், விஜய் தளபதி 67 படத்திற்கு 125 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் அஜித் ஏகே 62 படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் ஜெயிலர் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 80 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிஸ்மி.
மேலும், அந்த ட்வீட்டில் பெயின்டர் ஒருவரின் சம்பளம் ஒரு நாளைக்கு 800 ரூபாய் என்றும், மேஸ்திரி ஒருவரின் சம்பளம் 900 ரூபாய் என்றும், கார்பென்டர் ஒருவரின் சம்பளம் 6000 ரூபாய் என்றும் வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு மாதமே வெறும் 3000 ரூபாய் தான் என்றும் குறிப்பிட்டு கூலித் தொழிலாளர்களின் சம்பளமோ ரசிகர்களின் சம்பளமோ இதுவரை உயரவில்லை. ஆனால் நடிகர்கள் மட்டும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர் எனப் பதிவு செய்துள்ளார்.
பிஸ்மியின் இந்த ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். அதாவது விஜய்க்கு 125 கோடி என்றும் அஜித்துக்கு 105 கோடி என்றும் கூறி விட்டு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வெறும் 80 கோடி தான் சம்பளம் எனக் குறிப்பிட்டிருப்பது நியாயமா..? எதற்கு இவ்வாறு ரஜினியை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் எனக் கேட்டு விளாசி வருகின்றனர்.
Listen News!