• Sep 20 2024

நடிகர் அவதாரம் எடுத்துள்ள பாஜக அண்ணாமலை; சம்பளத்தை கேட்டு ஷாக்கான மக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திரைப்படத்தில் நடித்துள்ள தகவல் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்தார். எனினும் இதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை தேசியக் கட்சியான பாஜகவில் சேர்ந்து ஒரு அரசியல்வாதியாக மாறினார்.

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். மேலும் அரசியலில் தீவிரமாகவுள்ள அண்ணாமலை தற்போது சினிமா படத்தில் நடித்துள்ளார். 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் கன்னட மொழியில் படமாக்கப்படுகிறது.

மேலும் அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாஸுக்கு பயிற்சியாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அண்ணாமலையை அனுகியுள்ளார் படத்தின் இயக்குநர். அத்தோடு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத அண்ணாமலை, கதையை சொல்லுங்கள் கேட்போம் என தெரிவித்துள்ளார். இயக்குநர் கூறிய கதையை கேட்டதும் அண்ணாமலைக்கு ரொம்பவே பிடித்து போயிவிட்டதாம்.

நடிக்க உடனே ஓகே சொல்லி விட்டாராம். எனினும் இந்தப் படத்தில் நடிக்க ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளாராம் அண்ணாமலை. அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றது. அண்ணாமலை படத்தில் நடித்துள்ள தகவலை கேட்டு பாஜகவினர் குஷியில் உள்ளனர்.

Advertisement

Advertisement