மலையாள திரையுலகினர் உண்மையாகவே சக்சஸ் ஆன படங்களுக்கு சக்சஸ்
மீட் நடத்தி வரும் நிலையில் தமிழ் திரையுலகினர் படம் வெளியாகி இரண்டு
அல்லது மூன்று காட்சிகள் முடிந்த உடனே சக்சஸ் மீட்
நடத்தி வரும் கூத்தை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து
வருகிறோம்.
தோல்வி அடைந்த படங்கள், ப்ளாப் ஆன படங்கள், தயாரிப்பாளருக்கு
நஷ்டமான படங்களுக்கு கூட சக்சஸ் மீட்
நடத்தி வருவதை அடுத்து சக்சஸ் மீட் என்பது கேலிக்கூத்தாக
மாறி வருகிறது
இந்த நிலையில் மலையாள திரைப்படங்களான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ ‘பிரேமலு’ ’கண்ணூர் ஸ்குவாட்’ ’காதல் தி கோர்’ உள்ளிட்ட
படங்கள் உண்மையான வெற்றி பெற்ற பிறகு தான் சக்சஸ் மீட்
நடத்தி உள்ளது என்பதும் இதை பார்த்தாவது சக்சஸ்
மீட் என்ற கேலிக்கூத்துக்களை நடத்துவதை தமிழ்
திரை உலகினர் நிறுத்த வேண்டும் என்றும், இனியாவது திருந்த வேண்டும் என்று சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
மேலும் கூறியிருப்பதாவது:
’கண்ணூர் ஸ்குவாட்’, ‘காதல் தி கோர்’ போன்ற
படங்கள் உண்மையான வெற்றியை பெற்ற சில வாரங்கள் கழித்து
தான் சக்ஸஸ் மீட் நிகழ்வை நடத்தினர்
மம்முட்டி. தற்போது 'பிரம்ம யுகம்' படமும் பெரிய வெற்றி. ’பிரேமலு’, ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படங்களும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. அவர்களும் இனிமேல்தான் சக்ஸஸ் மீட் நடத்தவுள்ளனர்.
இங்கே.. படம் ரிலீசான மறுநாளே
கேக் வெட்டி சக்ஸஸ் மீட் கொண்டாடுவது பல
ஆண்டு நடைமுறையாகி வருகிறது. மக்கள் இதையெல்லாம் பார்த்து சிரிக்கிறார்கள் என்பது தெரிந்தும்... தொடர்ந்து இதை செய்து வருவது
கொடுமை.
சக்ஸஸ் மீட் என்றாலே.. அது
ஃப்ளாப் படமாகத்தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் நிலை எப்போதோ ஏற்பட்டு
விட்டது. ஆகவே.. இதுபோன்ற கூத்துகளை தமிழ் திரையுலகம் உடனே நிறுத்துவது தான்
நல்லது. ’கேப்டன் மில்லர்’, ’அயலான்’ போன்ற ஃபெயிலியர் படங்களுக்கு சக்சஸ் மீட் வைக்காத தயாரிப்பாளர்களுக்கு
பாராட்டுகள்.
இந்த வருடம் சக்ஸஸ் மீட் கொண்டாடிய ஓடாத
படங்கள்: ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர்
சலூன், வடக்குப்பட்டி ராமசாமி, ரணம்.
Listen News!