• Nov 19 2024

Premalu Review; பிரேமலு படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை! ஆனாலும் படம் இங்கிலீஷ் பட காப்பி?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை பொருத்தமட்டில் வெற்றி படங்கள் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் அவற்றை முந்தி அடிக்கும் விதமாக மலையாள படங்கள் குறைந்த பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பிரபலமாக காணப்படும் மஞ்சுமேல் பாய்ஸ், பிரேமலு ஆகிய மலையாள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் வசூலிலும் வேட்டையாடி வருகின்றன.

பிரேமலு படம் 100 கோடி வசூலை கடந்த நிலையில், மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 176 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிரேமலு படம் தமிழிலும் வெளியாகி உள்ளது. அதனை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி பிரேமலு  படம் பற்றி அவர் கூறிய பாசிட்டிவ் நெகட்டிவ் விமர்சனங்களை பார்ப்போம்.


இளைஞர்களின் இன்றைய காதல் கதையை காமெடியாக சொல்லும் படம் தான் பிரேமலு. இந்த படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளார்கள். இது  ரசிகர்களை ரொம்பவே கனெக்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.

பிரேமலு தமிழ் டப்பிங் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், அதுபற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுகையில்,


ஏணி வைத்தாலும் கிடைக்காத இடத்தில் ஹீரோயின் இருக்கிறார். ஆனால் அவரை எப்படி ஹீரோ கரெக்ட் பண்ணுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. உலக அளவில் டைட்டானிக் உள்ளிட்ட பல காதல் கதை படங்களில் எல்லா கதையும் ஒன்று தான். ஆனாலும்  இந்த படத்தில் மேக்கிங் திரைக்கதை சுவாரஸ்யமாக, யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றுள்ளது இதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

காமெடி நடிகர்கள் நடிக்கும் காட்சிகளில் கூட தனக்கு சிரிப்பு வரவில்லை என சொல்லும் ப்ளூ சட்டை மாறன், இந்த படத்தில் குபீர் குபிரென சிரிப்பு வந்துள்ளதாக பாசிடிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

இன்றைய தினம் தமிழில் வெளியாகி உள்ள அமிகோ காராஜ் மற்றும் சமுத்திரகனியின் யாவரும் வல்லவரே படங்களுக்கு  மத்தியில் இந்த படம் செம்ம டாப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement