• Sep 20 2024

சிவகார்த்திகேயனுடன் மோத நினைக்கும் ப்ளூ சட்டை மாறன் - கண்டபாட்டுக்குத் திட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சிவாஜி . இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து ஏவிஎம் நிறுவனம் திடீரென வெகு விமர்சையாக நேற்று கொண்டாடியது.

மேலும் ரஜினிகாந்தை நேற்றைய தினம் ஷங்கர் தனது மகளுடன் நேரில் சென்று சந்தித்தார். நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், பிரேம்ஜி என பல சினிமா பிரபலங்களும் சிவாஜி படம் பற்றிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன், அப்பவே சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் தியேட்டரில் போய் பார்த்தேன் என சிவாஜி படத்தை பாராட்டி டுவிட் போட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சொல்வது பொய் என்கிற வகையில் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்ரோல் மீம் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் ரஜினிகாந்த் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் சிவாஜி படத்துக்கு என்னடா குறை.. இப்போ டிவியில போட்டா கூட பார்க்கலாம்.. உன்னோட ஆண்டி இண்டியன் படத்தை ஒரு வாட்டி கூட பார்க்க முடியல இதுவே ஆண்டி இண்டியன் படத்தை 15 தடவை பார்த்தேன்னு சொன்னா ஃபயர் விட்டுருப்ப என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகனை ப்ளூ சட்டை மாறன் மாறனுக்கு எதிராக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement