• Sep 20 2024

போடுடா வெடிய- ஜெயிலர் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் விபரம்- டிக்கெட் புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் 169-வது திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. இதில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர்.

 இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார். மேலும் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்குஅனிரூத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. 


தமிழகத்தில் இப்படம காலை 9 மணிக்கு ரிலீஸாகவுள்து. இதனால் ஜெயிலர் படத்தின் ரிலீஸைக் கொண்டாடி வருகின்றார்கள். இப்படம் 900 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.அத்தோடு படத்தை பார்த்த ரசிகர்கள் நெல்சன் இத்தனை நாள் எங்கய்யா இருந்திங்க? ஜெயிலர அடிச்சிக்கிற மாதிரி இனி எவனும் படம் எடுக்க முடியாது. உங்க அமைதியின் வெளிப்பாடு அதிரடியா இருக்கு. ஜெயிலர் வேறலெவல் படம். என் ரஜினியை இவ்ளோ கெத்தா அழகா காட்டுன உங்களுக்கு கோடி நன்றி  என்றெல்லாம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்திற்கு ப்ரீ புக்கிங் எல்லா இடங்களிலும் அமோகமாக நடந்திருப்பதாக கூறப்படுகின்றன. அதன்படி தற்போது Pre Sales மூலம் படம் எல்லா இடங்களிலும் எவ்வளவு கலெக்ஷன் பெற்றுள்ளது என்ற விவரம் வந்துள்ளது.


North America : 1.6M USD (ரூ. 13.5 கோடி)

கர்நாடகா- ரூ. 7.5 கோடி

Europe- 450K € (ரூ. 4.1 கோடி)

Gulf- 650K USD (ரூ. 5.4 கோடி)

மலேசியா, சிங்கப்பூர்- ரூ. 5.2 கோடி

தமிழ்நாடு- ரூ. 20 கோடி

AP/TG- ரூ. 7.5 கோடி

கேரளா- ரூ. 1.9 கோடி

மற்ற இடங்கள்- ரூ. 5.5 கோடி

மொத்தம் ரூ. 80.01 கோடி வரை வந்துள்ளது, இதனால் படம் வேற லெவலில் வசூலிக்கப்போகின்றது என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement