• Nov 14 2024

தனுஷை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.

இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் தனுஷின் நடிப்பை கோலிவுட் திரையுலகினர் பலர் பாராட்டி இருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் நடிகை கரீனா கபூர் தனுஷ் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

பாலிவுட் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ் வேற லெவல் நடிகர் என்றும், அவர் எந்த கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்றும் அவரிடம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அத்தோடு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement