• Sep 21 2024

பாலிவுட் புதுமண தம்பதிகளை மேள வாத்திய இசையோடு வரவேற்ற இரு வீட்டார்.! வைரலாகும் காணொளி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியும் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள பிரபல சூர்யாகர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர். காதலை மறைமுகமாக வைத்திருந்த இவர்களது திருமண விழாவில் பத்திரிகையாளர்கள் யாருக்கும்  அனுமதி அளிக்கப்படவில்லை.


இந்நிலையில், திருமண புகைப்படங்களை இருவரும் தங்கள் இணையத்தளத்தில் பதிவிட்டனர். இந்த ஜோடிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்போது அதிகாரப்பூர்வமாக கணவன்-மனைவி என்ற திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் நேற்றிரவு டெல்லியை அடைந்துள்ளனர்.



இன்று சித்தார்த்தின் சொந்த ஊரான டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். நேற்று டெல்லியில் சித்தார்த்தின் வீட்டிற்கு வருகை தந்தபோது, அங்கு அவர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சித்தார்த்தின் வீட்டில் தம்பதிகள் தோள் மேளம் அடித்து மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டாடினார்கள்.

சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் பிப்ரவரி 4 அன்று தங்கள் குடும்பத்துடன் ஜெய்சல்மர் சென்றடைந்தனர். இந்த ஜோடி தங்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்களை பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் மெஹந்தி விழாவுடன் தொடங்கியது. அதன்பின், பிப்ரவரி 6ம் தேதி திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னர் பிப்ரவரி 7ம் தேதிக்கு மாற்றப்பட்டு மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.





Advertisement

Advertisement