'பாரிஸ்டர் பாபு' என்ற பெங்காலி சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானார் நடிகை அவுரா பட்நாகர். இவர் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பொம்மி பிஏபிஎல் சீரியலில் நடித்து வருகிறார். இதனால் இவரை செல்லமாக ரசிகர்கள் பொம்மி என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவுரா பட்நாகர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பல விடயங்கள் குறித்துப் பேசியிருந்தார். அந்தவகையில் கேமரா முன் முதலில் நடிக்கும் போது இருந்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில் "முதலில் கேமராவை பார்க்கும் போதே ரொம்பவும் பயமாக இருந்தது. அம்மா என்னுடனே இருந்து எனக்கு தைரியம் ரொம்பவும் கொடுத்தார். அதனால் தான் என்னால் மிகவும் சிறப்பாக நடிக்க முடிந்தது.
அந்த சமயத்தில் நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். தற்போது எட்டாம் வகுப்பு படிப்பதால் நடிப்பையும், படிப்பையும் பேலன்ஸ் செய்வது சற்று கஷ்டமாக இருந்தாலும் அதை சமாளித்து கொள்கிறேன். இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் தென்னிந்தியாவிலும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். என்னை அவர்கள் செல்லமாக பொம்மி பொம்மி என அழைக்கிறார்கள்.
அவர்களின் அன்பும் பாசமும் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. தமிழ் மிகவும் அழகாக பேசும் பொம்மி தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். எந்த ஒரு விஷயம் என்றாலும் ஏன், எப்படி என சமூகத்திடம் கேள்விகளை எழுப்பும் துணிச்சலான ஒரு கதாபாத்திரம் தான் பொம்மி. படிக்க வேண்டிய வயதிலேயே குழந்தை திருமணம் செய்யப்பட்டு விளையாட வேண்டிய வயதில் விதவையாக காலத்தின் கைதியாக தனது உரிமைக்காக போராடுகிறாள்.
மேலும் மூட நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் எட்டு வயது சிறுமியாக பொம்மி. நூறாண்டுகளுக்கு முந்தைய கதையயை கண் முன்னே படம் பிடித்து காட்டும் தொடர். பெண்கள் சிறகுகளை ஒடுக்கி வீட்டுக்குள் அடக்கி வைக்க படாமல் சிறகை விரித்து பறக்க வேண்டும், அவர்களுக்கான அடையாளத்தை இந்த சமூகம் கொடுக்க வேண்டும் என உணர்த்தும் கதை தான் பொம்மி" எனவும் கூறி உள்ளார்.
Listen News!