• Nov 14 2024

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கலங்கி நின்ற போண்டா மணி... உதவிய சிம்பு பட தயாரிப்பாளர்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 முன்னணி ஹீரோக்களுடன் காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி.விவேக், மயில்சாமி, வடிவேலு உட்பட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து போண்டா மணி நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.

இந்நிலையில், தனது மகளின் கல்லூரி படிப்பை நினைத்து கலங்கி நின்ற போண்டா மணிக்கு சொன்னபடி உதவியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.போண்டா மணி மகளுக்கு உதவிய தயாரிப்பாளர்: தமிழில் பல படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி. விவேக், வடிவேலு, மயில்சாமி, சந்தானம் என பலருடனும் காமெடியனாக நடித்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவரை அமைச்சர் மா. சுப்ரமணியன், பார்த்திபன், மறைந்த நடிகர் மயில்சாமி, நடிகர் விவேக்கின் மைத்துனர் செல் முருகன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்தனர்.

 அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட மேலும் சில முன்னணி ஹீரோக்களும் போண்டா மணிக்கு உதவி செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவரின் மகள் கல்லூரி படிப்புக்காக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உதவி செய்துள்ளாராம்.

வாரம் இரண்டு முறை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்து வரும் போண்டா மணி, குடும்ப சூழ்நிலை காரணமாக ஒருசில படங்களிலும் நடித்தும் வருகிறார். இந்நிலையில் தான் போண்டா மணியின் மகளுக்கு கல்லூரியில் படிக்க உதவி தேவைப்படுவதை அறிந்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அதாவது போண்டா மணியின் மகள் சாய் குமாரி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகவல் ஐசரி கணேஷுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரது மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும், தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வேல்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்தும் உதவியுள்ளாராம். இதனையடுத்து நடிகர் போண்டாமணி மிக உருக்கமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த பரிசாக என் மகள் 12ம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்."

"அதன்பின் அவரை கல்லூரியில் சேர்க்க பணம் வேண்டுமே என்ற கவலையில் இருந்தேன். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, 'உங்களது மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவரை படிக்க வைக்கிறேன் என' ஐசரி கணேஷ் உறுதியளித்திருந்தார். அவர் அன்று சொன்னபடி என் மகளின் ரிசல்ட்டை கேட்டு தெரிந்துகொண்டதோடு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் பிசிஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்."

"இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்துக்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என்று உருக்கமாகக் கூறியுள்ளார் போண்டா மணி. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, "மறைந்த நடிகர் விவேக் உயிரோட இருந்திருந்தால் யாரிடமும் உதவி கேட்கும் நிலை வந்திருக்காது" என நடிகர் போண்டா மணி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement