நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.இப்படமானது அடுத்த ஆண்டு பெங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார்.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதல் ஆளாக அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார். ஜனவரி 11ம் தேதி துணிவு திரைக்கு வருகிறது.
வாரிசு அதே நாளில் வருமா அல்லது அடுத்த நாள் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal💥#NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off @NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul @Gokulammovies @wcf2021
Listen News!