பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா விவாகரத்துக்கு பின் தன்னைவிட 11 வயது குறைவான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வளைத்ததில் அவ்வப்போது வைரலாகும்.
இருவரும் இணைந்து பார்ட்டியில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை மலைகா அரோரா, அர்ஜுன் கபூரின் உறவினர்களான குஷி கபூர், போனி கபூர், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை இன்ஸ்டாகிராமில் Un Follow செய்துள்ளார்.
ஆனால், தன்னுடைய காதலன் அர்ஜுன் கபூரை மட்டும் Follow செய்து வருகிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம். கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு அவர்கள் இருவரின் பிரிவை தான் குறிப்பிடுகிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அர்ஜுன் கபூரின் குடும்பத்தில் இவர்களுடைய காதலுக்கு ஓகே சொல்லவில்லை.
அதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த காதல் பிரிவு குறித்து மலைக்கா மற்றும் அர்ஜுன் இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!