பிக் பாஸ் 6 வீட்டில் வார, வாரம் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் சூப்பராக விளையாடி வருகின்றனர்.அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேறினார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர். தற்போது கதிரவன், மைனா நந்தினி ஆகியோர் ஆசிரியர்களாகவும், அமுதவாணன் பிரின்சிபல் ஆகவும் வருகிறார். மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டில் வருகின்றனர்.
எனினும் தற்போது நடந்த பள்ளிக்கூட டாஸ்க்கில் தனாவை காதலிப்பதாக அவர் பின்னால் அசிம் சுற்றித் திறந்தது அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, மாணவர்களாக இருந்த அனைவரும் ஒவ்வொரு கான்செப்ட் எடுத்து ஓவியங்கள் வரைந்து சமர்பித்திருந்தனர். இதில், ஷிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இப்படி பல விஷயங்கள், பள்ளிக்கூட டாஸ்க் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தது. அத்தோடு ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் சிறப்பாக தங்கள் பங்கை ஆற்றி வருவதாகவும் பிக்பாஸ் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.மேலும் இதற்கு மத்தியில், கதிரவன், அமுதவாணன் உள்ளிட்டோர் வகுப்புகள் எடுக்கும் போது, மாணவர்களாக இருக்கும் அசிம், மணிகண்டா உள்ளிட்டோரை மற்ற மாணவ மாணவிகள் பூமர் அங்கிள் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் வயதான நபர் போல ஒருவர் அறிவுரை வழங்கும் சமயத்தில் அவரை பூமர் என குறிப்பிடுவதை நாம் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனித்திருப்போம். தற்போது பிக்பாஸ் வீட்டிலும் பூமர் என்ற வார்த்தை பயன்டுத்தப்பட்டு வருகிறது.
இது பற்றி, மணிகண்டா, கதிரவன், மைனா உள்ளிட்டோர் இருக்கும் போது பேசும் தனலட்சுமி, "பூமர் அங்கிள்னா என்னனு தெரியுமா?. பூமர்னா அதரப்பழசு. அங்கிள்னா இந்த வீட்டுக்குள்ளே இரு, ஆறு மணிக்கு மேல வெளியே போகாத அந்த மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்கல்ல அவங்க தான் பூமர் அங்கிள்" என தெரிவிக்கிறார். எனினும் இதனைத் தொடர்ந்து, அசிமை பூமர் அங்கிள் என குறிப்பிட்டு தனா மற்றும் மணிகண்டா ஆகியோர் சிரிக்கவும் செய்கின்றனர்.
இதன் பின்னர், ஆசிரியர்களாக இருக்கும் மைனா நந்தினி மற்றும் கதிரவன் ஆகியோர், ஆசிரியர் இருக்கும் போது அவருக்கு தெரியாமல் வேடிக்கையான விஷயங்களை செய்தால் ரசனையாக இருக்கும் என்றும், அவருக்கு தெரியும் படி செய்தால் அது பெரிதாக இருக்காது என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Listen News!