• Nov 14 2024

இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம்.. 3ஆவது மனைவியோடு வந்த பிரபலம்.. இறுதியில் நடந்த கலவரம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப் வாயிலாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவரே ஐதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக். அதாவது இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது லைஃப் ஸ்டைல் பற்றிய கண்டெண்ட்டுகளை தினசரி பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டவர். 


அந்தவகையில் அர்மான் மாலிக்கிற்கு யூடியூபில் 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதனால் அவர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இவ்வாறு பிரபலங்களில் ஒருவராக மாறிய அர்மான் மாலிக் கடந்த 2011-ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு சிராயு மாலிக் என்கிற மகனும் உள்ளார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு அவரின் மனைவி பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவருக்கும், அர்மான் மாலிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து கிருத்திகாவையும் திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசித்து வருகின்றார். மேலும் சமீபத்தில் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை சந்தோசமாக வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது அவரது மற்றொரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், அர்மான் மாலிக் தனது மூன்றாவது மனைவியை, கர்ப்பிணி மனைவிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றார். அதாவது அவரின் மனைவிகளான பயலும் கிருத்திகாவும் வீட்டின் சோபாவில் அமர்ந்த போது அர்மான் மாலிக் மாலை அணிந்தபடி வீட்டிற்குள் வருகிறார். 


அந்த சமயத்தில் கிருத்திகாவையும் பயலையும் கண்களை மூடச் சொல்லி இருக்கின்றார். பின்னர் அர்மான் மாலிக் தனது மூன்றாவது மனைவியான லக்ஷ்யாவை வீட்டிற்குள் அழைத்து வந்து, பயல்-கிருத்திகாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்.

இதனைப் பார்த்ததும் உடனே அதிர்ச்சி அடைந்த முதல் இரு மனைவிகளும் ஆத்திரமடைந்தனர். அதற்கு அர்மான் மாலிக் அவர்களிடம் இது ஒரு பிராங்க் என்று சிரித்தபடி கூறுகின்றார். இருப்பினும் அவரது இரு மனைவிகளும் அவர் கூறியதை நம்பவில்லை. தற்போது இந்த வீடியோ ஆனது இணையத்தில் படு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement