வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவரது நடிடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் படமானது மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியானது ஆனால் அப்படம் மோசமான விமர்சனஙகளையே பெற்றது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங்கானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வாரிசு படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
#Varisu last schedule starts tomorrow. Just 2 action sequences and 2 songs left for the wrap.
Gear up for a grand #VarisuPongal 2023 #Varisu #Vaarasudu#Thalapathy @ActorVijay @directorvamshi @SVC_official
"படத்தின் கடைசி schedule ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இரண்டு சண்டை காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருக்கிறது. Gear up for a grand #VarisuPongal 2023" என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!