எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் 'துணிவு'. இப்படமானது வெளிவந்த நாள் தொடக்கம் இன்றுவரை வசூலிலும் சரி, வரவேற்பிலும் சரி சிறந்த விமர்சனங்களையே பெற்று வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தவகையில் துணிவு படத்தின் பட்ஜெட் ரூ. 145 கோடி ஆகும். இதில் இப்படமானது ரூ. 193 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் 'துணிவு' வெளியாவதற்கு முன்பே படத் தயாரிப்பாளருக்கு ரூ. 48 கோடி வரை லாபத்தை கொடுத்துள்ளது.
மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளிநாட்டில் வெளியிட்டது. இதில் துணிவு படம் ரூ. 65 கோடி வரை வசூல் செய்ததன் மூலம் ரூ. 24 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. இதன் மூலமாக ரூ. 7 கோடி வரை லைக்கா நிறுவனத்திற்கு இப்படத்தின் மூலம் லாபம் கிடைத்துள்ளது.
அத்தோடு கேரளாவில் வெளிவந்த இப்படம் ரூ. 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 2 கோடி ஷேர் கிடைத்துள்ள நிலையில் ரூ. 1 கோடி கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.
மேலும் கர்நாடகாவில் வெளிவந்த இப்படம் ரூ. 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 5.5 கோடி ஷேர் வந்துள்ளது. இதன் மூலமாக ரூ. 1 வரை லாபம் கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.
அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளிவந்த இப்படமானது சுமார் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 2.5 கோடி ஷேர் வந்துள்ள நிலையில் லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல் விநியோகஸ்தர் போட்ட முதலீடு மட்டுமே இப்படம் மூலம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தொகுத்துப் பார்த்தால் இப்படம் உலகளவில் ரூ. 201 கோடியும் தமிழகத்தில் ரூ. 118 கோடியும் வசூல் செய்துள்ளது. இவ்வாறாக ஆந்திரா/ தெலுங்கானா மற்றும் கேரளாவை தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் துணிவு திரைப்படம் லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டின் படி துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!