• Sep 20 2024

'தம்பி நானும் களத்தில் இருக்கேன்- அனிரூத்திற்கு டஃப் கொடுக்க ரெடியான ஏ.ஆர் ரகுமான்'- மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவூட் சினிமாவில் தற்போதைய இசை ஜாம்பவானாக வலம் வருபவர் தான் அனிரூத். இவரது இசையமைப்பானது தற்காலத்து இளைஞர்களைக் கவர்ந்துள்ளதால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். அந்த வகையில் இவர் இறுதியாக இசையமைத்த விக்ரம் டான் பீஸ்ட் ஆகிய திரைப்பட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அதிலும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்துப் பாடல் சர்வதேச அளவில் அட்ரெண்டிங் ஆகியுள்ளது. உலகளவில் அசுர ஹிட் அடித்து யூடியூபில் ஏகப்பட்ட ரெக்கார்ட்டுகளை பிரேக் செய்து புதிய ரெக்கார்டுகளை படைத்தது அரபிக் குத்து. ஜாலியோ ஜிம்கானா பாடல் மற்றும் திரை தீப்பிடிக்கும் பாடல்களும் பீஸ்ட் படத்தில் மிரட்டின

விக்ரம் படத்தில் பத்தல பத்தலன்னு பாட்டுப் போட்டு கமல்ஹாசனுக்கு சரியான கம்பேக் மியூசிக் போட்டிருந்தார். நாயகன் மீண்டும் வரான் பிஜிஎம்லாம் தியேட்டரில் ரசிகர்களை புல்லரிக்கவே வைத்து விட்டது. அதே போல காத்துவாக்குல ரெண்டு காதல், திரைப்படத்தின் "டூ டூ" பாடல் சிறுவர் முதல் பெரியவர் வரை எழுந்து நடனமாட வைத்தது.

இந்நிலையி,ல் அடுத்த ஆறுமாசத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆஜர் ஆகி உள்ளார். அதாவது அனிரூத் கோலிவுட்டை ஆட்சி செய்து வரும் நிலையில், அடுத்த ஆறு மாசத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், தம்பி நானும் களத்தில் இருக்கேன் என கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களின் பாடல்களையும், இசையையும் கொடுக்க ரெடியாகி விட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் மீம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement