தமிழ் சினிமாவில் 250 கோடி வரையில் சம்பளம் வாங்கும், முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர், தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, சிறப்பாக பயணித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து ஒரு பக்கம் அரசியல் செயற்பாடுகளில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் கோட் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் அரசியல் செயற்பாடுகளுக்கு பக்க பலமாக இருப்பவர் தான் புஸ்ஸி ஆனந்த். இவர், விஜய் ரசிகர் மன்ற கிளைக் கழக தலைவராக புஸ்லி தொகுதியில் இருந்தார். அதன்பின் விஜயின் தந்தை அவரை தமிழகத்தின் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆக்கினார்.
அண்மையில், புஸ்ஸி ஆனந்தின் பேச்சைக் கேட்டு தான் விஜய் இவ்வாறு எல்லாம் நடந்து கொண்டுள்ளார். விஜய் சொந்தமாக யோசிப்பது இல்லை என்று எஸ். ஏ. சந்திரசேகர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழக கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக புஸ்ஸி ஆனந்த் முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, த.வெ கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகும் முடிவில் இருக்கிறேன் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளாராம்.
எனினும் இது தொடர்பில் புஸ்ஸி ஆனந்த் அதிகார்வ பூர்வமாக தனது சமூக ஊடக கணக்குகளில் அறிவிக்கவில்லை. அதனால் இந்த தகவல் பொய்யாக இருப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!