• Nov 19 2024

சிகப்பு நிற மேச்சிங் மேச்சிங் உடையில் வருங்கால கணவருடன் திருமண கொண்டாட்டத்தில் பிசியான ஹன்சிகா...

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா.இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார்.


மேலும் இவர்களது திருமணம் டிசம்பர் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களது திருணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது.


திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் தற்போதே களைகட்டத் தொடங்கி உள்ளது. பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ள ஹன்சிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தற்போதே தொடங்கி விட்டன. நேற்று மட்டா கி சவுகி என்கிற சடங்கு நடந்தது.


இதில் தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா  எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் சிகப்பு நிற மேச்சிங் மேச்சிங் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement