• Nov 17 2024

வாய்ப்பு தாரேன்னு அந்தமாதிரி கூப்பிடுவாங்க... இது அவருக்கும் தெரியும்: சீதா கூறிய உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 புதிய பாதை திரைப்படம் முலம் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் தான் பார்த்திபன்.இவர் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் 2001ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது பார்த்திபன் குறித்து அடிக்கடி பேசி வருகிறார் நடிகை  சீதா.ஏற்கனவே இருவரும் ஏன் விவாகரத்து பெற்றோம் என பேசியிருந்த சீதா, தற்போது மீடூ விவகாரம் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

1985ல் வெளியான ஆண் பாவம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சீதா. பாண்டியராஜன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், புதிய பாதை திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் பார்த்திபன். புதிய பாதை படத்தில் ஜோடியாக நடித்த பார்த்திபனும் சீதாவும், காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அத்தோடு 1990ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, அடுத்த 11 ஆண்டுகளில் பிரிந்தனர்.இந்த ஜோடிக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில் , சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்த சீதா மீ டூ விவகாரம் குறித்தும் மனம் திறந்துள்ளார். அதில், "மீ டூ ஆரம்பித்தது நல்ல விசயம் தான். அது தனக்காக பேசத் தெரியாத பெண்களுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அதேநேரம் இப்போ எல்லா பெண்களுமே ரொம்ப தைரியமா இருக்காங்க, தனியா ஷூட்டிங் வர்றாங்க.அத்தோடு  நடிகைகள் கிட்ட யாராவது போன் பண்ணி அப்ரோச் செய்தால், முடியாது என்னு சொல்லிட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே?. அது இல்லாம 10 ஆண்டுகள் கழித்து சொல்வது சரியல்ல. அந்த நேரமே உங்களால் ஏன் கேட்க முடியவில்லை? ஏனென்றால் அந்த நேரம் உங்களுக்கு அந்த வாய்ப்பு வேண்டும். அப்படித்தானே? இது சினிமா மட்டும் இல்லை, எல்லாருக்குமே பொருந்தும் தான்" என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, "வேலைக்காக தானே வெளியில் சொல்லாமல் இருந்தீங்க? பிடிக்கலைன்னா வெளியே வரணும், இல்லை உங்களை அப்ரோச் பண்றவங்கள மாற்ற வேண்டும். இல்லைன்னா நீங்களே முடியாதுன்னு என சொல்லிட முடியும். இந்த 10 ஆண்டில் அந்த நபருக்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கலாம் அல்லவா? அவருக்கு அது தண்டனை தானே?" எனக் கூறியுள்ளார். அதேபோல், "யாருக்கும் தெரியாமல் அந்த நபர் போன் செய்தால், நீங்களும் யாருக்கும் தெரியாமல் முடியாது என சொல்லிவிடலாம். நான் சொல்றதை கேட்டு சிலர் திட்டலாம். ஆனால், இதுதான் என் பார்வை. எனக்கு பிரச்சினை வந்தால் நான் அதை எதிர்கொள்வேன். எனக்கு 'மீ டூ' வேண்டாம், சிலபேர் கேட்கத்தான் செய்வார்கள். நீங்க முடியாதுன்னு சொல்லிடலாம்" என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக விவாகரத்து குறித்து பேசியிருந்த சீதா, "பார்த்திபன் தான் என்னிடம் முதலில் காதலை சொன்னார். தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிடுங்கன்னு கேட்பார். ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். அதை என் அப்பா வேறு ஒரு போனில் இருந்து கேட்டுவிட்டார். அதன்பின்னர் தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் உள்ளுக்குள் இருந்தது. நான் ஒரு சராசரி பொண்ணு, பார்த்திபனும் அந்த அளவில் இருந்தவர் தான். பணம், அந்தஸ்தை எதிர்பார்த்து நான் அவரை விரும்பவில்லை. கணவரிடம் அன்பு வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் என்னிடம் இருந்தது. இது அவருக்கும் நன்றாக தெரியும்" என தெரிவித்துள்ளார்.


அத்தோடு, "சினிமா நடிகரை திருமணம் செய்யும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சினை என்று இல்லை. சினிமா என்பதால் அவர்களின் பிரச்சினை வெளியே தெரிகிறது. மற்றவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்ணுக்கு வேலை இருந்தால், அவள் பாதி பிரச்சினைகளை கடந்துவிடலாம்" என சீதா பேசியுள்ளார். மீ டூ குறித்தும் பார்த்திபனுடனான விவாகரத்து பற்றியும் சீதா மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement