• Sep 19 2024

லியோவில் விஜய் என்னதான் பண்ணிருக்கார்ன்னு தான் பார்க்க வந்தோம்; ஆனா சும்மா தெறிக்கவிட்டார்! அஜித் பேன்ஸ் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் செம்மையாக படம் உள்ளதென என்ஜாயாய் சொல்லி வருகின்றனர். 

முக்கியமாக கைதியில் போலீஸ் கேரக்டரில் நடித்த ஜார்ஜ் மரியான், அதே நெப்போலியனாக என்ட்ரி கொடுக்கும் குறித்த சீனில் தியேட்டரை அதிர வைத்துள்ளனர் தளபதி பிரியர்கள்.


 'லியோ' படத்தை அஜித் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்க்க வந்துள்ள நிலையில், தளபதி விஜய்யின் படம் பற்றி  பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளனர். அவ்வாறு அவர்கள் கூறுகையில்,

'நாங்கள் அஜித் பேன்ஸ் தான். லியோவில் விஜய் என்னதான் பன்ணிருக்கார்ன்னு தான் பார்க்க வந்தோம். ஆனால், விஜய் அதை Full fill செய்து சும்மா தெறிக்கவிட்டுள்ளார்' , 'படம் முழுக்க சென்டிமென்ட்டாக போனாலும் இப்போதைக்கு நிறைய ஸ்பாய்லர்ஸ் சொல்லக் கூடாது. ஆனால், லியோ படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும்' என அஜித் ரசிகர்களே உற்சாகமாக கூறியுள்ளனர். 

மேலும், லியோ லோகேஷின் LCU இணைந்துள்ளது சர்ப்ரைஸ் எனவும் தெரிவித்துள்ளதோடு,  விஜய்யின் லியோ ஆயிரம் கோடி வசூல் செய்ய அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லியோ படத்திற்கு  முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 100 கோடி வரை வசூல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement