இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’.இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். அவரின் ஜவானுக்கு மொத்த திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது அதற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் வந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரியா நன்றி, நாம் ஒரு புது குழந்தையை பெற்றுக்கொள்வோம். நான் இல்லை. நீங்களும் அட்லீயும் சேர்ந்து…தற்போது நாம் நண்பர்களாகிவிட்டோம் நான் கோ ப்ரோடியூசராக சேர்ந்து கொள்கிறேன் என்று ஷாருக்கான் பேசியுள்ளார் என்ன இப்படி பேசிட்டாரே என அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கு நெட்டிசன்கள், மேடையில் ஷாருக்கான் இப்படியா கொச்சை பேசுவது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அட்லீ என்ன ஒண்ணுமே சொல்லல என சொல்லி கலாய்த்தும் வருகின்றனர்.
Listen News!