நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு என்னுடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளிடம் கேட்டு பதில் சொல்கிறேன் என நடிகை ஒருவர் நக்கலாக பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் செலினா ஜெட்லி. இவர் பல பாலிவுட் திரைப்படங்களில், ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் நடிகை செலினா கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு இரட்டை குழந்தை உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தற்போது தனது கணவருடன் ஆஸ்திரியாவில் உள்ள செலினா ஜெட்லி, சமீபத்தில் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எனது உடல்நிலை தேறுவதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டு என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று தெரிவித்தார்.
எனினும் இதற்கு பதிலளித்த செலீனா, ‘நான் என் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் கேட்டு பதில் சொல்கிறேன்’ என நக்கலாக பதில் அளித்துள்ளார். அத்தோடு நடிகையின் இந்த பதிலை பதிலுக்கு பல நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!