விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.
இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது நேற்றைய தினம் வெளியான ப்ரோமோவில் தொகுப்பாளர் பிரியங்கா சாப்பாடு பிளேட்டுடன் கடத்தப்பட்டுள்ளார் என்பது போல் காட்டப்பட்டது.
இதனையடுத்து இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் லுங்கி அணிந்து வந்து பிரியங்காவை வனிதா மீட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தன்னுடைய பேச்சினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். அத்தோடு நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் வனிதா பிரியங்காவிடம் "என்ன தைரியம் இருந்தால் நாங்க இல்லாமல் ஷோ நடத்துவாய்..?" எனக் கேட்கின்றார். இதனையடுத்து "இந்த ப்ரொபேர்ட்டி எங்களுக்கு தான் சொந்தம், நாங்க தான் இன்னிக்கு " என பிரியங்காவை கடத்தியவர் கூறுகின்றார்.
அதற்கு வனிதா "சோறு போட்டு முதலில் உன்னால சமாளிக்க முடியுமான்னு பாரு" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
Listen News!