சமீபகாலமாக ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அதிலும் விஜய்டிவி சீரியல்களுக்கென்று தன் ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
அந்தவகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் குறைந்த டி ஆர் பியில் ஓடிய இந்த சீரியல் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய போது தான் ட்ரெண்டிங் ஆனதோடு அந்த சீனை வைத்து பல மீம்ஸ் எல்லாம் கிரியேட் ஆனதும் யாவரும் அறிந்ததே.
இதனால் இந்த சீரியல் டி ஆர் பியிலும் முன்னிலையில் உள்ளது.அந்த வகையில் இந்த சீரியலில் வெண்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஃபரினா ஆசாத் . இவருடைய நடிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் சில நாட்களாக இந்த சீரியல் பின்தள்ளப்பட்டுள்ளது. வில்லி வெண்பாவின் கதாப்பாத்திரம் டம்மி ஆக்கப்பட்டது தான் ரேட்டிங் குறைய காரணம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் வெண்பா ரோலில் நடித்து வரும் ஃபரினா ஆசாத் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பேசும்போது விரைவில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சீரியலை முடிக்க சொல்வதாக கூறி இருந்தார்.மேலும் நெட்டிசன் ஒருவர் ஃபரினாவிடம் "நீங்க முஸ்லீம் தானே? நீங்கள் செய்வது haram" என விமர்சித்து இருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுத்த அவர் "சமூக வலைத்தளத்தில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின்தொடர்ந்து, அவரிடம் இப்படி கேள்வி கேட்பது தான் முதலில் haram லிஸ்டில் வரும்" என கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- உங்கள் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டாலே நிம்மதி வந்து விடும்- ரஜினியை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்
- முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் சூர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!