நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், தமிழ் மற்றும் இந்தியில் எழுதி, இசையமைத்த வந்தே வந்தே மாதரம் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்திர். இவருக்கு கடந்த மாதம் ஜூலை மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். சிகிச்சைக்கு பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்த டி ராஜேந்தர் வந்தே வந்தே மாதரம் என்ற ஆல்பம் பாடலை பேரனுடன் இணைந்து பாடி உள்ளார்.
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், என் வாழ்க்கையில் முக்கியமான நாள், என்னடா உணர்ச்சிவசப்படுகிறார் என்று நினைக்கலாம்ன உணர்ச்சி வசப்படுபவன் தான் நல்ல உணர்வு உள்ள மனிதன். அத்தோடு என்னுடைய முதல் படம் ஒரு தலை ராகத்தில் இருந்து காதல் அழிவதில்லை படம் வரை அனைத்து படத்திற்கும் நான் இசையமைத்து இருக்கிறேன். பல படங்களுக்கு ப்ளாட்டினம் டிஸ்க் வாங்கி இருக்கிறேன்.
அத்தோடு, டி.ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற இசை நிறுவனத்தின் சார்பில் உருவாக்கி இருக்கிறேன். இதில்,ஆயிரக்கணக்கான டியூன்கள் உள்ளது.மேலும் இந்த நிறுவனம் எனக்கு மட்டுமில்லாமல், சின்ன சின்ன தயாரிப்பாளர் வேதனையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறேன் என்றார்.
தமிழகத்தில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நேரத்தில், வந்தே வந்தே மாதரம் பாடலை தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி ராஜேந்திரன், ரூபாய் நோட்டிலும், ரயிலில் இந்தி இருக்கிறது என்பதற்காக அதில் நாம் யாரும் போகாமல் இல்லை, இந்தி இல்லாமல் வாழ முடியுமா? என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்து தாய்நாட்டுக்காக தமிழ்தேசத்துக்காக ஒரு பாடலை உருவாக்கவிருக்கிறேன் அது என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன் நேரம் வரும் போது நிச்சயம் சொல்லுவேன் என்றார். இதையடுத்து, சிம்பு திருமணம் எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, என் குடும்பம் பற்றி கேள்வி கேட்டு என்னை சங்கப்படுத்த வேண்டாம் என்று டி.ஆர்.ராஜேந்தர் பதிலளித்தார்.
Listen News!