• Nov 17 2024

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் திரைப்பட நடிகை சோனாலி பேந்திரே-அவரின் தற்போதைய நிலை தெரியுமா ?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சோனாலி_பேந்திரே. அதனைத்தொடர்ந்து காதலர் தினம் என்ற படத்தின் மூலம் இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார் .மற்றும் கண்ணோடு காண்பதெல்லாம் என்கின்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார் .

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வேளையிலேயே தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய கோல்டி பெஹல்லை என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து குடும்பம் குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டார் .படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட சோனாலி அவ்வப்போது ஹிந்திய தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொள்வார்.

இதை தொடர்ந்து சோனாலி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நோயால் தான் பல பாடங்களை கற்று கொண்டதாக சோனாலி தைரியமாக கூறினார் அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் சிகிச்சையின் போது அவருக்கு செய்யப்பட்ட சத்திரிகை சிகிச்சையினால் உடலில் 23 அங்குலம் உடைய தழம்பு உள்ளது என்றும் சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்தில் நடக்கவேண்டும் என்றும் காய் பிடியை பயன்படுத்தி நடந்தேன் என்றும் அந்த நாட்கள் மிகவும் கடினமானவை என்றும் 45 வயது ஆகின்ற சோனாலி கவலையுடன் இதனை கூறினார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது குணமடைந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement