லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
இன்று காலை இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாட்கள் கனவு நிறைவேற உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், விக்ரம் பார்க்கும் முன்னர் கைதியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுமாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் படம் ரிலீஸாகிவிட்ட கிட்டதட்ட கைதி 2 என்று சொல்லுமளவுக்கே இரண்டு படங்களுக்கும் அதிகளவில் ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் விக்ரம் படம் பற்றிய டுவிட் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “கமல் சாரை ஆக்ஷன் அவதாரில் பார்க்க காத்திருக்க முடியவில்லை. படம் பற்றி நல்ல கருத்துகளை கேட்டுவருகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இயக்குநர் லோகேஷுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- ஷாரூக்கின் ‛ஜவான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – எத்தனை மொழிகளில் வெளியாகின்றது தெரியுமா..?
- ‘நீங்க ஏன் கவலைப்படுகிறீங்க பதட்டப்படாதீங்க’- ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்
- ‘மணிமேகலை சொன்ன மாதிரியே நடந்த எலிமினேஷன்’- குக்வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?
- விஜயுடன் நான்காவது தடவையாக ஜோடி சேரப்போகும் பிரபல நடிகை-லோகேஷ் வைத்த வைத்த ருவிஸ்ட்…!
- விக்ரம் படத்திற்கு வாழ்த்து மழை பொழியும் அதே நேரம் இயக்குநர் நெல்சனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!