நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கேப்டன் மில்லர். இதில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் பீரியட் படமாக உருவாகுவதால் நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக தென்காசியில் நடந்து முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகிருக்கின்றன.
கேப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு வில்லனாக ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ளார்.. நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படதனதின் டீசர் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் திரும்பி பார்க்கவைத்த நிலையில் எப்போ படம் ரீலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை தொடர்ந்து டிசம்பர் 15-ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில்,
அந்த படத்திற்கான பிசினஸ்அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே 100 கோடியை தொட்டுவிட்டதாக தற்போது வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!