நடிகர் கமலின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பகத் பாசில் ,விஜய்சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
கமல் நடிப்பில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ரசிகர்களிடையே அதிகளவான எதிர்பார்ப்பானது காணப்பட்டது. இவ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.
தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வசூல் செய்து வரும் இந்தப்படம் இனி வரும் நாட்களில் அதிக வசூலை செய்த திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜிற்கு விலையுர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்திருந்தார். அது மட்டுமன்றி அவருடன் பணியாற்றிய 13 உதவி இயக்குநர்களுக்கு TVS Apache RTR 160 பைக்கை அன்பளிப்பாக அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நயன்தாராவையே மிஞ்சும் அளவுக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை பூஜா ஹெக்டே
- கொள்ளை அழகில் விதவிதமான போட்டோஷுட் நடத்தி தெறிக்க விடும் நஸ்ரியா
- நீச்சல் வீரருக்கு பயிற்சி அளிக்கும் அண்ணாமலை- அரபி படத்தின் டீசர் ரிலீஸ்
- ‘கமல் ரசிகர்களுக்கு விக்ரம் படம் அன்லிமிடெட் அசைவ விருந்து’- நெகிழ்ச்சியில் பிரபல இயக்குநர்
- முன்னாள் மனைவி மீது வழக்கு தொடுத்த பிரபல நடிகர்- நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ரூ.48 லட்சத்திற்கு விருந்து..!
- விக்ரம் படத்தை இத்தனை முறை பார்த்தாரா திரிஷா- ரசிகர்களுக்கு என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!