• Nov 19 2024

சிவகார்த்திகேயனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிரான வாழ்க்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்பவர் சிவகார்த்திகேயன். மேலும்  இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிரின்ஸ்' படம் படு தோல்வியை சந்தித்தது. மேலும் இந்தப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரி டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ படத்தை தயாரிப்பதற்காக 5 கோடி கடனாக பெற்றிருந்தது. எனினும் இதற்காக தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் இதுவரை தராததால், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் என்டேர்டைன்மென்ட் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. எனினும் அப்போது டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தரப்பில், 2019ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், பிரின்ஸ் படத்திற்காக பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பிரின்ஸ் படத்தில் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்ததாகவும், தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.அத்தோடு  திரைத்துறையில் சிவகார்த்திகேயனுக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் இந்த மனுவை டேக் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வாதிட்டார்.

ஐந்து படங்களுக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் இல்லை என்பதற்கான ஆதாரமாக சென்சார் போர்டு சான்றிதழ்களையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, சான்றிதழ்களை ஆராய்ந்த நீதிபதி சரவணன், பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்தார். இதனால் அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த தீர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், படம் பார்த்த அப்பாவிகள்: 'டிக்கட் காசையவாது ரிடர்ன் பண்ண சொல்லுங்க ஐயா' என கேட்பதை போல சிவகார்த்திகேயனை பங்கமாய் கலாய்த்து பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாறனை விளாசி தள்ளி வருகின்றனர்.




Advertisement

Advertisement