சாதிய அடக்க முறையால் பிக் பாஸ் வீட்டில் ஒதுக்கப்படும் முக்கிய போட்டியாளர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மற்ற சீசன்களை காட்டிலும் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது மற்ற சீசனங்களில் ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு போட்டியாளரை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்வார்கள். மேலும் அந்த வகையில் ஓவர் ஆட்டிடியூடாக இருந்ததால் ஓவியாவை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்தார்கள்.
இவ்வாறு போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் அல்லது வெற்றிப் பெறுவார்கள் என்ற பயத்தில் கூட டார்கெட் செய்தவர்களை பார்த்ததுண்டு. ஆனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சாதிய ஒடுக்கு முறையால் நல்ல திறமையான போட்டியாளரை சக போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
அவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து அங்கீகாரமும் அந்த வீட்டில் பறிக்கப்பட்டே வருகின்றது. இதற்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அதுமட்டுமின்றி கமல் கூட இதுகுறித்து ஒரு முறை கூட பேசியதும் இல்லை. திருநங்கைகளுக்கு உள்ள திறமையை வெளிக்கொண்டு வரவேண்டுமென ஷிவினை முன்னுதாரணமாக பிக் பாஸ் கொண்டு வந்துள்ளது.
அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஷிவினும் பிக் பாஸில் சிறப்பாக விளையாண்டு வருகிறார். ஆனால் சாதி என்ற அடிப்படையில் விக்ரமனை சக போட்டியாளர்கள் தொடர்ந்து ஒதுக்கி வைக்கிறார்கள். மேலும் அவர் எந்த விஷயத்திற்கு குரல் கொடுத்தாலும் அங்கு எடுபடுவதில்லை.
விக்ரமன் ஒரு பத்திரிக்கையாளர் மட்டுமல்லாமல் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவரும் கூட. வெளியில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் குரல் கொடுத்து வந்த விக்ரமனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு பல சமயங்களில் விக்ரமன் கூறுவது சரியாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள போட்டியாளர்கள் மறுக்கிறார்கள்.
கமலும் பலமுறை விக்ரமன் பக்கம் நியாயம் இருப்பதை கூறினாலும், மற்ற போட்டியாளர்களால் அவர் ஒதுக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் உள்ளார்.அத்தோடு எல்லாவற்றிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் கமல் இந்த சாதியை ஒடுக்கு முறையை பற்றி பேசினால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் வெளியில் சாதி வெறி பிடித்திருக்கும் சிலருக்கு சாட்டையடியாக இருக்கும்.
Listen News!