• Nov 17 2024

எனக்கு பிடிக்கல, இயக்குநரை மாத்துங்க: திடீரென கூறிய சிம்பு?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக நடிகராக அறிமுகமாகி தனக்கென்று முக்கிய இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இவரின் மார்க்கெட்டை அதிகரித்துள்ளது.

தன் எடையை வெகுவாக குறைத்துவிட்டு வந்த சிம்புவின் கெரியர் உச்சத்தை தொட்டிருக்கிறது.

இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் புகழ் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டார். மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிப்பாரென்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சிம்பு கூறியிருக்கிறாராம். மேலும் கோகுலை மாற்றுமாறு சிம்பு கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இதையடுத்து கோகுலை நீக்கிவிட்டு அவருக்கு பதில் லிங்குசாமியை ஒப்பந்தம் செய்ய ஐசரி கணேஷ் முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

மேலும் சிம்பு தற்போது தன் அப்பா டி. ராஜேந்தரை கவனித்து வருகின்றார். டி. ராஜேந்தருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement